2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டெங்கு அபாய கட்டத்தை நோக்கி இலங்கை!

உள்ளூர்June 18, 2026 · 4 months முன்5
டெங்கு அபாய கட்டத்தை நோக்கி இலங்கை!

டெங்கு நோய் பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அபாய கட்டத்தை எட்டும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

‘BIG FOCUS’நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் மாதம் முதல் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கமைய, ஏப்ரல் மாதத்தில் 5,600 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 8,500 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் அனில் ஜாசிங்க, 

பொதுவாக டெங்கு நோய் சில வருடங்களுக்கு ஒருமுறை அதி-தொற்று நிலையை அடையும் ஒரு தன்மையே வரலாற்றில் காணப்படுகிறது. 

இதில் ஆகக்கூடிய சிவப்புப் புள்ளி 2017 இல் பதிவாகியுள்ளது. இவ்வருட வரைபடத்தில் நீல நிறப் புள்ளி மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

இதனை நாம் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த நேரத்தில் நாம் விழிப்புடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது. 

வருடம் முழுவதும் இவ்வாறான செயல்பாடுகள் முக்கியமாகும். காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப இது மாறுபடலாம் எனத் தெரிவித்தார்.