2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெற்றார் அந்தாலிப் எலியாஸ்!

உள்ளூர்June 16, 2026 · 4 months முன்6
பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெற்றார் அந்தாலிப் எலியாஸ்!

இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் H.E. Andalib Elias, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன்15 அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்தோடு, இரு நாட்டு மாணவர்களின் நலனுக்காக கல்வித்துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரஸ்பர நலன் சார்ந்த ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் திரு. முஹம்மது ஜன்னதுல் ஹபீப் Md. Jannatul Habib, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் ஆதியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.