2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் AI தடுப்பூசி!

உலகம்June 5, 2026 · 2 months முன்2

எதிர்காலத் தொற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கில், ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட முற்றிலும் புதிய வகை தடுப்பூசி ஒன்று முதன்முறையாக மனிதர்களில் பரீட்சார்த்தமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆய்வில், தடுப்பூசியின் முக்கிய அங்கமான ‘அன்டிஜென்’பகுதி முழுமையாக செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைரஸ்கள் மரபணு மாற்றம் அடைந்தாலும் அல்லது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவினாலும், ஒட்டுமொத்த வைரஸ் குடும்பத்திலிருந்தும் பாதுகாப்பை வழங்கும் ‘விசேட அன்டிஜென்’ ஒன்றை இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கியுள்ளது.

தற்போது 39 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இதன் தாக்கம் ‘மிதமானதாக’ உள்ள போதிலும், இது தொற்றுநோய் தயாரிப்பு முறையில் ஒரு அடிப்படை மாற்றம் எனப் பேராசிரியர் ஜொனாதன் ஹீனி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக 200 பேரைக் கொண்டு இதன் செயற்திறன் ஆராயப்படவுள்ளதுடன், காய்ச்சல் மற்றும் எபோலா போன்ற நோய்களுக்கும் இந்த முறையில் தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக பிபிசி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.