2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தீயில் சிக்கிய முதியோர் பராமரிப்பு நிலையம்!

உள்ளூர்June 4, 2026 · 4 months முன்9
தீயில் சிக்கிய முதியோர் பராமரிப்பு நிலையம்!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த தீ விபத்து, ‘மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல’ எனப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நிலையத்தில் சுமார் 72 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்த 7 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீயினால் கருகிய நிலையில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், கட்டிடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த நிலையத்தில் மனநலக் குறைபாடுகளைக் கொண்டவர்களும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.