2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் புதிய கட்டம் ஆரம்பம்

உள்ளூர்May 29, 2026 · 3 months முன்1
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் புதிய கட்டம் ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன. 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 18.7 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்தப் பணிகள் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதற்கட்டப் பணிகளுக்காக 78 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 112.4 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. 

இந்தத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து நிதிகளும் உள்நாட்டு நிதியுதவிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது