யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் பலி

மாத்தளையில் ஹதுன்கமுவ, லேடியங்கல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வில்கமுவ பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வயலுக்கு சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




