2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

மன்னார் பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்0
மன்னார் பகுதியில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இன்றைய தினம் காலை நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் வைத்து கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் போது 25 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோ கிராம் எடை கொண்டது எனவும், சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் அதன் இலங்கை பெறுமதி பல கோடி என தெரியவருகிறது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.