2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பிணை வழங்க வந்த போலி பிணையாளர்கள்!

உள்ளூர்May 13, 2026 · 5 months முன்4
பிணை வழங்க வந்த போலி பிணையாளர்கள்!

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, ஒரு சந்தேக நபர் 10 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும், மற்றுமொரு சந்தேக நபர் 07 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.

 

குறித்த சந்தேக நபர்கள் தமது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தி, அந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.