குழந்தையின் உடல் மாயம்

தெமட்டகொடை, மாளிகாவத்தை ரயில் நிலையத்தின் கழிப்பறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 1ஆம் திகதி குழந்தையின் உடல் கண்டறியப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த உடலை எடுக்கச் சென்றபோது, உடல் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெமட்டகொடை பொலிஸாரின் அறிவிப்பை அடுத்து, மருதானை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மருதானை பொலிஸார் கூறினர்.