2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

துப்பாக்கிச் சூடு வழக்கு: சட்டத்தரணிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி.

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்0
துப்பாக்கிச் சூடு வழக்கு: சட்டத்தரணிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி.

கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ், துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் சட்டத்தரணிக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த சட்டத்தரணியை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு 14 நாட்கள் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.