2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 32° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தேர்தல் முறைமையை பரிசீலிக்க பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

உள்ளூர்May 5, 2026 · 5 months முன்13
தேர்தல் முறைமையை பரிசீலிக்க பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

மாகாண சபைத் தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவினால் இது தொடர்பான அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்டது. 

மாகாண சபைத் தேர்தல் சட்டங்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்டக் கட்டமைப்புக்களை ஆழமாக மீளாய்வு செய்தல், அது குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அமைப்பதற்குத் தேவையான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தல் என்பன இந்த விசேட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான பொறுப்புகளாகும். இந்தக் குழுவின் தலைவராக பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

ஏனைய உறுப்பினர்களாக, கலாநிதி உபாலி பன்னிலகே, முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வடகல, ரவி கருணாநாயக்க, ஜே. சி. அலவத்துவல, ஹர்ஷண ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக்க ஜயகொடி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, மயில்வாகனம் ஜெயகதீஸ்வரன் மற்றும் சந்திம ஹெட்டியாரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.