அரசின் புதிய வரிக் கொள்கைக்கு சஜித் கடும் சாடல்

அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் மற்றும் அதன் கொள்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் தெரிவிப்பதாவது, ஜூலை 1ஆம் திகதி முதல் வரி வலையை விரிவுபடுத்துதல், வரி விகிதங்களை உயர்த்துதல் மற்றும் கடுமையான அமுலாக்க நடவடிக்கைகள் ஆகியவை ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த புதிய வரி மாற்றங்களின் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) வரிச் சட்டகத்திற்குள் கொண்டுவரப்படவுள்ளதுடன், நிதிச் சேவைகள் அதிக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, டிஜிட்டல் பொருளாதாரமும் பெறுமதிசேர்வரி (VAT) முறையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




