2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 33° ⛅ கண்டி 29° ⛈️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வடக்கு, கிழக்கில் விமர்சையாக இடம்பெற்ற ITAK கட்சியின் மே தின பேரணிகள்!

உள்ளூர்May 1, 2026 · 5 months முன்4
வடக்கு, கிழக்கில் விமர்சையாக இடம்பெற்ற ITAK கட்சியின் மே தின பேரணிகள்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியுள்ளது. 

வடக்கு மாகாண பேரணி முல்லைத்தீவு, மாங்குளத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண பேரணி, பட்டிப்பளையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது. 

பட்டிப்பளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் , புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். 

தமிழ் மக்கள் தமது பாரம்பரிய வாழிடப் பிரதேசங்களை தாமே நிர்வகிக்கும் உரிமையை வழங்குவது, விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளில் நீண்டகாலமாக நிலவும் வாழ்வாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.