2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாடளாவிய 21 நகரங்களில் மே தின உற்சாகம் – தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

உள்ளூர்April 30, 2026 · 4 months முன்2
நாடளாவிய 21 நகரங்களில் மே தின உற்சாகம் – தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை(01) மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 21 முக்கிய நகரங்களில் 21 மே தினக் கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

நுவரெலியாவில் நாளை காலை நடைபெறும் மே தினக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் மஹரகமையில் நடைபெறும் பிரதான மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.