2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கு ஜூன் 10 வரை ஒத்திவைப்பு

உள்ளூர்April 24, 2026 · 4 months முன்1
யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கு ஜூன் 10 வரை ஒத்திவைப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (24) அழைக்கப்பட்டது. இதன்போது, அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இணையாக மற்றுமொரு வழக்கு இலக்கம் 08 மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அந்த வழக்கிற்காக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கிற்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக திகதியொன்றை வழங்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி, இந்த வழக்கினை ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் கட்டளையிட்டார். 

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஈட்டிய முறையை வெளிப்படுத்த முடியாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மூன்று தனியார் வங்கிகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.