2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை உறுதி – இந்திய மத்திய அரசு உத்தரவு.

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்2
இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை உறுதி – இந்திய மத்திய அரசு உத்தரவு.

நாட்டின் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 2015 ஜனவரி 9ற்கு முன் ஆவணமின்றி இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், இனி சட்டபூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்ட தண்டனை விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது இனி சட்டவிரோத குடியேற்ற குற்றச்சாட்டு அமையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.