2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7 வது ஆண்டு நினைவேந்தல் சீயோன் தேவாலயம். காந்திபுங்கா, கல்லடி பாலம் நினைவு தூபிகளில் பலத்த பாதுகாப்புடன் சுடர் ஏற்றி அஞ்சலி…

உள்ளூர்April 21, 2026 · 4 months முன்3
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  7 வது ஆண்டு நினைவேந்தல் சீயோன் தேவாலயம். காந்திபுங்கா, கல்லடி பாலம்  நினைவு தூபிகளில் பலத்த பாதுகாப்புடன் சுடர் ஏற்றி அஞ்சலி…

மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (21) தேவாயத்தின் முன்னாலும். காந்திபூங்கா, மற்றும் கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் பாலத்த பாதுகாப்புக்கு மத்திலில் கண்ணீர் மல்க மலர் வைத்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் கவனயீர்பு ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.

2019ம் ஏப்பில் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினுள் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கவராத அமைப்பை சேர்ந்தவர்களான ஸாரான்காசீம் தலைமையிலான குழுவினரால் தற்கொலை குண்டுதாக்குதல் நடாத்தப்பட்டது இதில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் இருககண்களையும் இழந்ததுடன் 2 பேர் இடுப்புக்கு கீழ் இயங்காது நிலையில் படுக்கையில் இருந்துவருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.05 மணிக்கு ஆரம்பித்தது இதில் மட்டு சீயோன் தேவாலயத்துக்கு முன்னால் பாதி;கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மலர்தூவி சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2019 ஏப்பிர் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் தனது சிறுவனான மகன் உட்பட ஒரே குடும்பத்தில் 3 பேர்; உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் கண்பார்வை இரண்டையும் முற்றாக இழந்து பாதிக்கப்பட்டுள்ள உறவினர் உயிர்நீத்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி மலர் வைத்து சுடர் ஏற்p மௌன அஞ்சலி செலுத்தினார்