2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

ஜயஸ்ரீ மகா போதியின் ஆசிகளுடன் தொடங்கும் சமாதான நடை பயணம்

உள்ளூர்April 17, 2026 · 4 months முன்2
ஜயஸ்ரீ மகா போதியின் ஆசிகளுடன் தொடங்கும் சமாதான நடை  பயணம்

அமெரிக்காவில் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த அமைதிப் பேரணியை வழிநடத்திய வணக்கத்திற்குரிய பன்ஞங்கர தேரர் தலைமையில் பன்னிரண்டு பிக்குகள் நாட்டில் நடைபெறும் அமைதிப் பேரணியில் பங்கேற்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதியின் ஆசிகளைப் பெற்ற பின்னர் இம் மாதம் 22 ஆம் திகதி அனுராதபுரத்திலிருந்து அமைதிப் பேரணி ஆரம்பமாகும். அட்டமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தின் ஆசிகளுடன் பெறப்படும் ஸ்ரீ மகா போதி மரக்கன்றும் இந்த அமைதிப் பேரணியில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. ஏப்ரல் 22 ஆம் திகதி காலையில் சங்ககத தக்ஷிணாவைக்குப் பின்னர் புனித நகரமான தம்புள்ளையிலிருந்து புறப்படும் சமாதானப் பேரணியானது நாவுல, மாத்தளை, கண்டி, கடுங்கன்னாவை, கேகாலை, தொலங்கமுவ, கஜுகம, யக்கல, மஹர மற்றும் களனி வழியாக ஏப்ரல் 28 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமாதானப் பேரணியின் நிறைவு நாளைக் குறிக்கும் வகையில் இறுதி நாளில் சுதந்திர சதுக்கத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஸ்ரீ மகா போதி மரக்கன்றானது உத்தியோகப்பூர்வமாக அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மகா சங்கத்தினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது