2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மசகு எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

உள்ளூர்April 16, 2026 · 4 months முன்2
மசகு எண்ணெய் இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கிலிருந்து 9,750 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று நாளை (17) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு இலங்கைக்கு வருகை தரும் முதலாவது மசகு எண்ணெய் கப்பல் இதுவெனக் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போதைய எரிபொருள் கையிருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதோடு அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏந்திய கப்பலொன்று வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், அங்கிருந்து இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்ய சுமார் 45 நாட்கள் எடுக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.