2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பண்டிகை காலத்தில் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக தொடர்கின்றன

உள்ளூர்April 13, 2026 · 6 months முன்1
பண்டிகை காலத்தில் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக தொடர்கின்றன

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். 

பண்டிகைக் காலத்திற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுக்கும் விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தை ஏப்ரல் 30 வரை செயற்படுத்துகிறோம். 

குறிப்பாக விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், சந்தையில் நுகர்வோரை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்குதல் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை எமது அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். 

ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும். 

அதற்கமைய அதிகாரிகள் தேவையான தலையீடுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.