2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மேற்காசிய போர்நிறுத்தத்திற்கு இலங்கையின் வரவேற்பு

உள்ளூர்April 11, 2026 · 4 months முன்3
மேற்காசிய போர்நிறுத்தத்திற்கு இலங்கையின் வரவேற்பு

மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

இந்த முன்னேற்றமானது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், பொதுமக்களின் மனிதாபிமானத் துயரங்களைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறு அனைத்துத் தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.

பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது

இந்தப் போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்தவும், பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் தூதரக ரீதியாகப் பங்களிப்பு செய்த நாடுகளின் பாத்திரத்தையும் இலங்கை அரசு பாராட்டியுள்ளது.