2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் கவனம் : டிஜிட்டல் யுகத்தில் திருடர்களின் புது வழி

தொழில்நுட்பம்April 3, 2026 · 6 months முன்4
உங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் கவனம் : டிஜிட்டல் யுகத்தில் திருடர்களின் புது வழி

பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறையில் இருப்பது தொடர்பான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு தெரியப்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்போர் பண்டிகை காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பதிவுகளைக் காண்பதன் மூலம் திருடர்கள் திட்டமிட்டு இருப்பிடங்களுக்குள் புகுந்து பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடிக்கத் தூண்டுவதாக அமைகிறது.

எனவே, நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள காவல்; நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது சிவில் பாதுகாப்புக்குழு தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி பாதுகாப்பு கமராக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புக்களை சரியாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.