2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

உள்ளூர்February 7, 2026 · 6 months முன்1
மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் நேற்று (06) மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குடும்பிமலைப் பகுதியில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

மீட்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.