2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

உள்ளூர்February 16, 2026 · 6 months முன்2
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளை (17) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய நிலையங்களுக்கு பரீட்சார்த்திகள் வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியரு சந்திரதாச தெரிவித்தார்.