2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், ஏரியின் வான் கதவுகள் இன்று (04) பிற்பகல் திறக்கப்பட்டதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் சீரற்ற காலநிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக கிரிகோரி ஏரியில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளது. இதேவேளை, நுவரெலியா – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் தொப்பஸ் முதல் லபுகலை வரையிலான பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், அந்த வீதிகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டுநர்கள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூர்August 4, 2026 · 2 weeks முன்2

இந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன், இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் 24,440 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றிருந்தனர். 

இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர். 

அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.