2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

மன்னார்  தீவை அழிவிற்குள்  தள்ளும் அரசு

உள்ளூர்September 27, 2025 · 11 months முன்1

மன்னார் காற்றாலை மின் திட்டத்தினை அரசு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. குறித்த காற்றாலை மின் உற்பத்தியானால்்மன்னார்  பாரியளவில் பாதிப்படையவுள்ளதாக சிவில் சமூக அமைப்புக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த்து வருகின்றனர்.


குறித்த மின்காற்றாலை மற்றும் மண் அகழ்வு தொடர்பில் பாராளுமன்றிற்கு விஜயம் செய்தருந்த மன்னார் சிவில் சமூக அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டதாவது.


இத் திட்டம் தொடர்பில் மன்னார் மக்களுடன் பேசியே ஒரு முடிவுக்கு வருவோம் என அரசு கூறியிருந்தது.


இந் நிலையில் அரசின் முக்கிய செயலாளர் ஒருவர் மன்னார் திட்டத்தை முன்னெடுக்க எந்தவிதமான தடைகளும் இல்லை திட்டத்தை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.


இவ்வாறான நிலையில் மன்னாரில் அமைதி வழியில் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை அரசின் பொலிஸார் தாக்கியுள்ளனர். இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராக நாம் வன்மையாக கண்டிக்கிறோம். என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


அவர் இன்று கட்சியின் யாழ் அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.