2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

34வது நாளாக மன்னாரில் தொடரும் போராட்டம்.

உள்ளூர்September 6, 2025 · 11 months முன்2

மன்னார் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை 34 வது நாளாகவும் தொடர்ச்சியாக முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டம் இன்றைய தினம் 34வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் “காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும் நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு”, “அரசே எமது உயிரோடு விளையாடதே”, “காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே”, “சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பல பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த போராட்டத்தில் இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.