2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

கல்முனை பாடசாலை அதிபர் செய்த சாதனை

உள்ளூர்November 3, 2025 · 9 months முன்0

கல்முனை கமு/அஸ்-ஸ/ஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்று பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் சிறப்பாக பாடசாலை வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸ/ஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ச/ஹதுல் நஜீம், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர்(நிர்வாகம்) எம்.எச்.எம் ஜாபீர், பாடசாலை ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இப்பாடசாலையில் சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் அதிதிகளால் 04 தடவை உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.