சாமரவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக அவர் பணியாற்றியபோது செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.