2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

உள்ளூர்February 3, 2026 · 6 months முன்1

அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது.

அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது.

அதன்படிஇ புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்துஇ கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளது.

அந்தப் பதவிக்கான பதில் கடமைகளை மேற்கொள்வதற்காகக் கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டிருந்ததுடன்இ அவரது பதில் கடமைக் காலமும் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

தற்போது கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளதுடன்இ ஜனாதிபதியினால் பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சபைக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும்இ அந்தப் பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்பட்டன.

எவ்வாறாயினும்இ கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்இ அது தொடர்பில் அரசியலமைப்புச் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

இதனிடையேஇ பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன்இ சுதந்திர தினம் காரணமாக நாளை (04) பாராளுமன்ற அமர்வு நடைபெறாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.