2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

புறா பிரச்சினையால் ஒருவர் பலி

உள்ளூர்January 19, 2026 · 7 months முன்1

புறாக்கள் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே இன்று பிற்பகல் பேலியகொட, மீகஹவத்த பகுதியில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் வத்தளை, ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.