MuSHArraf
Aug 20, 2025
உலகம்
உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இணைத்தில் வைரலாகும் வீடியோ!
அமெரிக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நினா சாண்டியாகோ, பேட்ரிக் பிளாக்வுட் உணவகத்தில் Food Vlog எடுத்து கொண்டிருந்தபோது கார் மோதியது.
உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Food Vlogகிற்காக ரசித்து ருசித்து இப்படி சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை, எங்கிருந்தோ வந்த கார் மோதி நிலைகுலைய வைத்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. நினா சாண்டியாகோ, பேட்ரிக் பிளாக்வுட் ஆகிய இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்.
இவர்கள் குறிப்பாக உணவகங்களுக்கு சென்று அந்த கடையின் தனித்துவமான உணவுகளை சாப்பிட்டு Review கொடுப்பது இவர்களின் வாடிக்கை. இவர்களுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் உள்ள CuVee's Culinary Creations என்ற உணவகத்துக்கு சென்று Food Vlog எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வந்த கார் ஒன்று உணவகத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக்கொண்டு நினா மற்றும் பேட்ரிக் அமர்ந்திருந்த இருக்கை மீது மோதியது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All