jino
Aug 20, 2025
உலகம்
ட்ரம்புக்கு கொலை மிரட்டல்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
50 வயது நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்ற பெண், ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று தன்னுடைய பேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில், “ FBI அதிகாரிகளிடம் ட்ரம்ப்பை POTUS என குறிப்பிட்டு கொலை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ஆகஸ்ட் 14ஆம் திகதி அன்று மற்றொரு பதிவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம் அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்யுமாறும், அவர் பயங்கரவாதி என்றும் ரோஸ் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவின் இரகசிய சேவை நடத்திய விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ் தான் தெரிவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ரோஸ் ஜோன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All