jino

Aug 15, 2025

பல்சுவை

"கூலி" முதல் நாளில் உலகளவில் 151 கோடி வசூல் சாதனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்படம், நேற்று வெளியாகி, முதல் நாளில் உலகளவில் 151 கோடி ரூபாய் வசூல் செய்து, தமிழ் திரைப்படங்கள் வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் குவித்த படமாக சாதனை படைத்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ரஜினிகாந்தின் 171வது படமான "கூலி" நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமிர் கான் (சிறப்பு தோற்றம்), பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன்படி இக் "கூலி" திரைப்படம் முதல் நாளில், - இந்தியா: 75.25 கோடி ரூபாய்

வெளிநாடு: 8.61 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 75.5 கோடி ரூபாய்)

மொத்த உலகளவு வசூல்: 150.75 கோடி ரூபாய், 151 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

பிராந்திய சாதனைகள்:

கர்நாடகாவில் முதல் நாள் வசூல் 14.2 கோடி ரூபாயாக உள்ளது, இது விஜய்யின் ‘லியோ’ படத்தின் 13.65 கோடி ரூபாய் சாதனையை முறியடித்து, கோலிவுட்டின் மிகப்பெரிய தொடக்க வசூலாக உள்ளது.

அவுஸ்திரேலியாவில் 535,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு மேல் வசூலித்து, தமிழ் படங்களில் முதல் நாள் அதிகபட்ச வசூல் சாதனையை படைத்துள்ளது.

மேலும், அதே நாளில் வெளியான ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான "வார் 2" படத்துடன் கடும் போட்டி இருந்தபோதிலும், "கூலி" தனித்துவமான வசூல் சாதனையைப் படைத்துள்ளது.

நாகர்ஜூனா (தெலுங்கு), உபேந்திரா (கன்னடம்), சௌபின் ஷாஹிர் (மலையாளம்) ஆகியோரின் பங்களிப்பு இப்படத்தை பேன்-இந்திய அளவில் பரவலாக்கியுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி ரசிகர்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி வசூல் செய்யும் திரைப்படமாக "கூலி" திரைப்படம் அமையும் என உலக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp