jino
Aug 14, 2025
பல்சுவை
வெளியானது "கூலி" திரைப்படம் - கொண்டாடும் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "கூலி" திரைப்படம் இன்று உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா, ஆந்திரா,கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளைத் திரையிடலாம் எனவும் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து படத்தை கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை அதிக திரையரங்குகளில் "கூலி" திரைப்படம் திரையிடப்படுகின்றது.
நீண்ட காலத்துக்கு பிறகு, ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை நிகழ்த்தி, முதல் நாளே "கூலி" திரைப்படம் சாதனை படைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- மேலும், திரைப்படம் பார்த்த பார்வையாளர்கள் தங்கள் முதல் கருத்துக்களை சமூக வலைதளங்களில், பகிர்ந்து வருகின்றனர். "கூலி திரைப்படம்" ரஜினிகாந்தின் வசீகரிக்கும் நடிப்பை வெளிப்படுத்துவதாகவும், லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான அதிரடி காட்சிகளுடன் வலுவான உணர்வுபூர்வமான கதையை உருவாக்கியுள்ளதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் ஆகியோரின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். நாகார்ஜுனாவின் வில்லத்தனமான கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனிருத் யின் அதிரடி இசை படத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. "கூலி" திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் முதல் கோலிவுட் திரைப்படமாக அமையும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் "கூலி" திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All