jino

Aug 20, 2025

பல்சுவை

46 வருடங்களுக்கு பின் இணையும் சூப்பர்ஸ்டார் - உலகநாயகன்.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "கூலி". இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி உலக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என சமூக ஊடகங்களிடையே தகவல் பரவி வருகின்றது.

இப்படம் மட்டும் படமாக்கப்பட்டால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே கொண்டாட்டம் தான் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp