jino
Aug 13, 2025
பல்சுவை
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ரொனால்டோ.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட கால காதலியான, ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடித்து உள்ளார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்
இதனிடையே, ரொனால்டோவும் - மாடல் அழகியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக "லிவிங் டு கெதரில்' வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், நீண்ட கால காதலியான, ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்க உள்ளார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
திருமண நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜார்ஜியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த நிச்சயதார்த்த மோதிரம் விலையுயர்ந்தது எனக் கூறப்படுகிறது. சுமார் 10 முதல் 15 கரட் வரை இருக்கலாம் என்றும், அதன் விலை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ற்கும் ரசிகர்கள் மற்றும் காற்பந்து விளையாட்டு ஜாம்பவான்கள் மற்றும் உலகின் முன்னணி பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All