jino
Aug 19, 2025
உலகம்
நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென தீ பரவல்.
க்ரீஸிலிருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
க்ரீஸில் இருந்து புறப்பட்ட இவ் விமானத்தில் 273 பயணிகளும் 8 ஊழியர்களும் இருந்த நிலையில், புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எஞ்சினில் தீப்பிடித்தவுடன் இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டு குறித்த விமானத்திலிருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
பிரிண்டிசி நகரத்தில் தங்குவதற்கான போதிய ஹோட்டல்கள் இல்லாததால் விமான நிலையத்திலேயே பயணிகள் தூங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகினர். இதற்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. பின்னர் அவர்கள் வேறு விமானம் ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனிடையே நடுவானில் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All