MuSHArraf
Aug 18, 2025
உலகம்
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

டெல்லியில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் கூட்த்திற்கு பிறகு நடந்த செய்தியாளர்களை சந்தித்த, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
"பாஜக ஆட்சிமன்றக் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் (தேசிய ஜனநாயக கூட்டணி) முன்னதாகவே விவாதித்தோம். தேர்தலை சுமுகமாக நடத்த எங்கள் எதிர்க்கட்சியையும் விவாதிப்போம்..." என்று நட்டா கூறினார்.
யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

சி.பி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார், ஜூலை 31, 2024 அன்று இந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக அவர் பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All