jino

Aug 12, 2025

உலகம்

பாலியல் வழக்கில் கைதானவர், முறைப்பாடளித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம்

ெல்லியில் உள்ள வசந்த் விகார் பகுதியில் அழகு நிலையம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு அபுசயீர் சயிபி மற்றும் அமான் சுக்லா ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல் முறைப்பாட்டை தெரிவித்திருந்தார்.

அவரது முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதனிடையே, கைதான அபுசயீர், தன் மீதான வழக்கை மீளப் பெறுமாறு கூறுவதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அந்த பெண் எந்த பதிலும் அளிக்கவில்லை. அத்துடன் முறைப்பாட்டையும் மீளப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த வழக்கில் அபுசயீர் சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தன் மீது முறைப்பாடளித்த பெண்ணை பழிவாங்க முடிவு செய்த அவர், கடந்த 31ஆம் திகதி, அந்த பெண் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்த போது, அவரை பின்தொடர்ந்து சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பாக சந்தேகநபரை கைது செய்து, தனியாக வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

முக்கிய செய்திகள்

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp