MuSHArraf
Aug 16, 2025
பல்சுவை
ஐசரி கணேஷ் தயாரிக்கும் 10 படங்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், 2025 முதல் 2027 வரை 10 படங்களைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்கள் குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில், 5 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுந்தர். சி, கௌதம் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தோணி, அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, என். செல்லா அய்யாவு, மற்றும் கணேஷ் பாபு ஆகியவர்கள் இயக்க இருக்கும் படங்கள் குறித்த வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட பத்து இயக்குனர்களும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் வெற்றி படங்களை கொடுத்தவர்கள் என்பதால், அடுத்தடுத்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All