2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

GovPay ஊடாக அபராதம் செலுத்திய அதிகளவான சாரதிகள்

உள்ளூர்February 4, 2026 · 6 months முன்1

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட “GovPay” செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் அபராதத் தொகையை “GovPay” செயலி ஊடாகச் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 11,715 சாரதிகள் இந்தச் செயலி மூலம் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளனர்.

வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் அதிகளவான தொகை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினால் ஈட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.