2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

யாழில்.போதைப்பொருள் வழக்கில் இருந்து பிணையில் வந்தவர் உயிரிழப்பு

உள்ளூர்December 19, 2025 · 8 months முன்1

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இளைஞன் மூன்றாவது நாளே போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 03 நாட்களுக்கு முன்னர், அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்று பிணை வழங்கி இருந்தது.

இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள அறை ஒன்றில் கதிரையில் அமர்ந்தவாறு, மூச்சற்று காணப்பட்ட நிலையில், வீட்டார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை அடுத்து சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , அதிக போதையை நுகர்ந்தமையால், மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.