2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

‘அரகலய’ போராட்டம் குறித்து விசாரணை : நாமல் ராஜபக்ஷ

உள்ளூர்February 14, 2026 · 6 months முன்1

அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

“போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள். இளைஞர் கூட்டமொன்றைத் தூக்குமேடைக்கு அனுப்பினார்கள். ஆலோசனைகளை வழங்கிவிட்டு, பகிரங்க ஊடகங்களுக்கு வந்து ‘இப்போது வெளியே வாருங்கள், வீதிக்கு இறங்கித் தாக்குங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று கூறியவர்கள் இன்று அரசாள்கிறார்கள். அந்த இளைஞர்கள் தூக்குமேடைக்குச் சென்றுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.