2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

மர்மமான முறையில் அதிகரிக்கும் மரணங்கள்

உள்ளூர்March 31, 2026 · 5 months முன்0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் அல்வாய் பகுதியை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த முதியவர் நேற்று தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக எமது செய்தியாளார் மேலும் தெரிவித்தார்.  வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். 

இந்நிலையில் இன்று காலை முதியவர் வியாபாரி மூளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.