Search

Rizi

Nov 2, 2025

உலகம்

லண்டன் ரயிலில் கத்திக்குத்து: 10 பேர் படுகாயம்

லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

காயமடைந்தவர்கள் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டொன்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கிச் சென்ற ரயிலிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது.

இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஹன்டிங்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதனையடுத்து, உடனடியாக ரயில் நிலையத்தில் வைத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது ஒரு "முக்கிய அவசரகாலச் சம்பவம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலின் நோக்கம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp