Nov 2, 2025
உலகம்
மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீ விபத்து - 23 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சிறப்பங்காடியில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழந்துடன். மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்
மெக்சிகோவின் சோனோராவில் இயங்கி வரும் சிறப்பங்காடி ஒன்றில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு படையினர், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் உதவ, உள்துறை அமைச்சருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், சோனோரா மாநில ஆளுநர் அல்போன்சோ ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

திடீரென தீப்பற்றியதுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






