Jino
Sep 20, 2025
அரசியல்
அநுர ஆட்சி அமைந்திருக்காவிடின் - நாடு சென்றிருக்கும் பாதையை சிந்திக்க முடியுமா?
இலங்கையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெற்றது வெறும் ஆட்சி மாற்றம் மாத்திரமா? நிச்சயமாக இதனை அனைவரும் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்த்துகொண்டிருக்கிறோம். ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெளிப்பாடுகளை மக்கள் நன்கு அவதானிக்க வேண்டும்.
தோல்வியுற்ற அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேற்றும், இனவாதத்துக்கு நீர்பாய்ச்சும் அல்லது அனுதாபத்தை தேடும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சிலர் வரவேற்பும் அளிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டதை அனுதாப நோக்கில் பலர் பார்த்தனர். அதேபோன்று மகிந்த ராஜபக்ச, உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சென்றமையை தற்போது அனுதாப அலைக்காக பயன்படுத்துகின்றனர். ஆட்சிமாற்றத்துக்காக ஒன்றிணைந்த மக்கள் இதற்கு ஆதரவளிக்க முடியுமா?
நிச்சயமாக இல்லை......!
ரணில் விக்ரமசிங்க, இன்று நேற்று முளைத்த அரசியல் காளானா? 1977ஆம் ஆண்டு முதல் நேரடி அரசியல் பல்வேறு பதவிகளை அலங்கரித்தவர். 1977 இற்கு முன்பு ஐ.தே.கவின் இளைஞர் அணியின் முக்கிய புள்ளி. இந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதான நபர்களில் ஒருவராக இருந்தவர்.
'மிஸ்டர் கிளன்' என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்தான் 2015இல் மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு காரணமாக இருந்ததாக அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். அதிகாரம் யார் பக்கம் இருந்ததோ அவர்களுக்கு விசாரணைகளும், தீர்ப்புகளும் சாதகமாகின. இந்த மோசடி இடம்பெற்ற தருணத்தில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கக் கூட வழக்கிலிருந்து முழுமையாக விடுதலைச் செய்யப்பட்டார்.
அதிகாரத்தை அவர்களுக்காக வளைத்தனர். மகிந்த ராஜபக்சவும் இத்தகைய ஊழல்களுக்கு ஆதரவளித்தவர். யுத்தத்தை வெற்றிக்கொள்ள தலைமை வழங்கியிருந்தாலும் அவரது ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து எவரும் மறந்திருக்க மாட்டர்.
2020ஆம் ஆண்டும் மீண்டும் மகிந்த தரப்புக்கு அதிகாரம் கிடைத்தது என்ன செய்தனர்? இந்த நாட்டை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி மீண்டெழ முடியாத நிலைக்குத் தள்ளினர்.
பாரம்பரிய அரசியல் சக்திகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் விரட்டியத்ததே முதல் வெற்றிதான். அதனை எண்ணி மக்கள் மீண்டும் சலசலப்புக்கு உள்ளாக கூடாது.
இந்த நாட்டில் இடம்பெறும் அனைத்துக் குற்றங்களும் முழுமையாக பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அநுர அண்மையில் கூறியது போல் இங்கே அரசாங்கத்துக்கு அப்பால் ‘கருப்பு அரசாங்கம்‘ ஒன்று உள்ளது. சமகால அநுர அரசு பாதாள உலகத்தையும் போதைபொருளையும் முற்றாக ஒழிக்கும் சவாலை ஏற்றுள்ளது.
மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்காடிவின் எமது எதிர்கால சந்ததியினர் பற்றி சிந்தித்துகூட பார்த்திருக்க முடியாது.
இந்த நாட்டில் போதைப்பொருள் கலாசாரமும், பாதாள உலகமும் உருவாக அவை போசனைப்படுத்த அரசியல் அடைக்கலமே அல்லது ஆதரவே காரணம்.
அண்மையக்காலமாக கைதுசெய்யப்படும் பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்களின் பின்புலம் அவர்கள் இந்த நாட்டில் செய்துவரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அந்த வலைப்பின்னலில் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறையினர் பற்றி நாம் பார்க்கிறோம்.
ரணில், மகிந்த அல்லது அவர்கள் பாசறையில் உருவாகியவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் இந்த நாடு எப்படி இருந்திருக்கும் என சிந்தித்துக்கூட பார்க்க முடியாதுள்ளது.
இந்த ஒரு பணியை செய்வதற்காகவேனும் இந்த அரசாங்கத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும். நாட்டை அதளபாதாளத்துக்கு தள்ளி மக்களை கடும் வறுமைக்கு கொண்டுசென்றுள்ள கடந்தகால ஆட்சியாளர்கள் கைதுசெய்யப்படுவதால் அனுதாபங்கள் ஏற்பட்டு மக்கள் சலசலப்புக்கு உள்ளாகுவதால் அவர்களின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கைதான் நாசமடையும்.
இந்த விடயத்தில் மாத்திரமல்ல நாட்டில் பல்வேறு துறைகளில் நீண்டகால இலக்குடன் பணிகள் இடம்பெறுகின்றன. இந்தவொரு நாட்டிலும் நீண்டகால அபிவிருத்திப் பணிகளால்தான் மக்கள் முன்னேற முடியும் என்பதுடன், நாடும் முன்னேறும்.
குறுகிய கால சலுகைகளால் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரங்களை மக்கள் மறந்துவிட கூடாது. ஸ்திரமான பொருளாதாரமொன்று மெல்ல மெல்ல கட்டியெழுப்பப்படுகிறது. இதன் உடன் இணைந்ததாக பல்வேறு தொழில்வாய்ப்புகள் உருவாகும். மக்களின் வாழ்க்கைச் செலவும் குறைவடையும்.
ஓர் இலக்குடன் பயணிக்கும் திட்டங்களுக்கு மக்களின் வரவேற்பு அவசியமாகும்.
சு.நிஷாந்தன்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All