Search

admin

Jan 11, 2026

உள்ளூர்

மின்சாரம் தாக்கி சிறுவன் உட்பட இருவர் பலி

குச்சவெளி – ரஸ்நாயக்கபுர பகுதியில்  மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று காலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை பகுதியில்  குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த  மின்சார கம்பியில் சிக்கிய தனது ஆட்டை காப்பாற்ற முயன்றபோது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலகொலவேவா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இறந்தவர் ரஸ்நாயக்கபுர பகுதியில் வசிக்கும் 75 வயதுடைய நபர்.

காட்டு விலங்குகளிடமிருந்து  பயிர்களைப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் குறித்து ரஸ்நாயக்கபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All