Search

Oct 23, 2025

உலகம்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை.

ரஷ்யாவின் இரு பெரும் எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் - லுகோயில் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனில் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த புதிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • புதிய தடைகள் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

இத் தடைகள் அமைதி செயல்பாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.

மேலும், "இவை மிகப்பெரிய தடைகள். ரஷ்யாவில் உள்ள இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான மிக முக்கியமான தடைகள் இவை, மேலும் போர் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புவதால் அவை நீண்ட காலம் நீடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All